ஜும்ஆ குத்பா

தமிழ் மொழியில் ஜும்மா மற்றும் பெருநாள் உரைகள்
 

குவைத்தில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 100000 த்தை தாண்டும்.

இந்த நம் தமிழ் மக்கள் தம் தாய்மொழியிலேயே ஜும்மா மற்றும் பெருநாள் உரைகளை கேட்கும் விதத்தில் குவைத் அவ்காப் அமைச்சகம் இந்திய தமிழ் ஜாலியாத்தின் பொறுப்பில் மூன்று பள்ளிகளை ஒப்படைத்துள்ளது. ஒன்று குவைத் சிட்டி பகுதியிலும் மற்றொன்று பாஹில் (ரிக்கா) பகுதியிலும் அமைந்துள்ளது.

இந்த மூன்று பள்ளிகளிலும் குரான் சுன்னா அடிப்படையில் உரைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. நமது மூன்று பள்ளிகளிலும் காலத்திற்கு ஏற்ற தலைப்புகளில் செய்திகள் சொல்லப்படும். நமது மர்கசின் தாயிகள் இந்திய தமிழ் ஜாலியாத்தின் அங்கீகரிக்கப்பட்ட கதீப்கள் ஆவர்.

பேசப்படும் தலைப்புகள் அனைத்தும் குவைத் அவ்காபின் அனுமதி பெற்ற தலைப்புகளாகும். ஒவ்வொரு வாரமும் நிகழ்த்தப்பட்ட உரைகளின் கேசட்டுகள் அவ்காபில் ஒப்படைக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிட்டி – மஸ்ஜித் அல் முதவ்வா

ரிக்கா பள்ளி

மங்காப் பள்ளி