கோடைகால வகுப்பு
மாணவ செல்வங்களின் கோடை கால இரண்டு மாத விடுமுறைகள் பயனுள்ள வழியில் கழிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக நமது இஸ்லாமிய தஃவா சென்டர் இரண்டு மாத கோர்சாக கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.
மாணவர்களின் வயது வாரியாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப
குர்ஆன் ஓதுதல்
குர்ஆன் மனனம்
துஆக்கள்
இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்
இஸ்லாமிய கொள்கை விளக்கம்
ஹதீஸ்
சீறா
அரபி மொழி பயிற்சி
ஆகிய தலைப்புகளில், பாட தொகுப்புகள் மாணவர்களிடம் வழங்கப்பட்டு சீரான முறையில் நடைபெறும்.
சுமார் நான்கு ஆண்டுகளாக இந்த பயிற்சி வகுப்புகள்நமதுமைய்யத்தின் சார்பாக நடை பெற்று வருகிறது.
முதல் இரண்டு ஆண்டுகள் நமது மர்கஸில் வைத்தும் சென்ற 2008 ஆம் ஆண்டு grand mosque என அழைக்கப்படும் மஸ்ஜித் கபீரில் நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டு சால்மியாவில் இந்த வகுப்புகள் நடைபெற்றன.
இந்த வகுப்புகளின் சிறப்பம்சங்களில் சில…
பாதுகாப்பான வாகன வசதி
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி
பயிற்சி முகாமின் பாடங்கள் முடிந்த பின் முறையான தேர்வு
பயிற்சி முகாமின் பாடங்கள் முடிந்த பின் ஒரு நாள் மாணவர்ககுடன் மார்க்க வரம்பை பேணிய சுற்றுலா
கடைசியில் முகாம் முடிவடைந்த பின்னர் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ செல்வங்களுக்கு சிறப்பு பரிசுடன் சான்றிதலும். ஏனைய மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுடன் சான்றிதலும் வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றன.
குறிப்பு : கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி நமது ஜும்மா பள்ளிகளில் வைத்து நடைபெற்றன.அந்நிகழ்ச்சிகளில் மாணவர்களில் சிலர் தாம் பெற்ற பயிற்சியை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
2010 ஆம் ஆண்டு IDC அலுவலகத்தில் இந்த வகுப்புகள் நடைபெற்றன.
இந்த வகுப்புகளின் சிறப்பம்சங்களில் சில…
பாதுகாப்பான வாகன வசதி
பயிற்சி முகாமின் பாடங்கள் முடிந்த பின் முறையான தேர்வு
பயிற்சி முகாமின் பாடங்கள் முடிந்த பின் ஒரு நாள் மாணவர்களுடன் மார்க்க வரம்பை பேணிய சுற்றுலா
இஸ்லாமிய வரலாறுகளின் ஒலி ஒளி காட்சி
கடைசியில் முகாம் முடிவடைந்த பின்னர் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ செல்வங்களுக்கு சிறப்பு பரிசுடன் சான்றிதலும். ஏனைய மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுடன் சான்றிதலும் வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றன.
குறிப்பு : கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி நமது பெண்கள் நிகழ்ச்சியில் வைத்துநடைபெற்றன.. அந்நிகழ்ச்சிகளில் மாணவர்களில் சிலர் தாம் பெற்ற பயிற்சியை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.