சிறப்பு நிகழ்ச்சிகள்
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 25,26 ஆகிய தேதிகள் குவைதின் தேசிய விடுமுறை தினமாகும்.அந்நாட்களில் தமிழ் மக்கள் விடுமுறையை பயணுள்ள வழியில் கழிக்க வேண்டும் என்பதற்காக வருடந்தோரும் ஒரு நாள் இஜ்திமா நடைபெறுகின்றன. காலையிலிருந்து ஆரம்பிக்கும் நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும்.நிகழ்ச்சியில் IDC மதரஸா மாணவர்களின் நிகழ்ச்சி மற்றும் சிறந்த மார்க்க அறிஞர்களின் உரையும் அன்றைய நிகழ்ச்சிக்காக நடத்தப்படும் குர்ஆன் அறிவு திறன் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மதிய இடைவேளையில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டு விடுமுறை நாளை பயனுள்ள நாளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நமது மர்கஸ் சார்பாக செய்துதரப்படுகின்றன.பெண்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சிக்காக தமிழகம் மற்றும் சவூதியிலிருந்து தமிழ் இஸ்லாமிய அழைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
2003 ம் வருடம் உள்நாட்டு அழைப்பாளர்கள்
2004 ம் வருடம் உள்நாட்டு அழைப்பாளர்கள்
2005 ம் வருடம் உள்நாட்டு அழைப்பாளர்கள்
2006 ம் வருடம் உள்நாட்டு அழைப்பாளர்கள்
2007 ம் வருடம் உள்நாட்டு அழைப்பாளர்கள்
2008 ம் வருடம் ரஹ்மதுல்லாஹ் இம்தாதி
2009 ம் வருடம் கோவை அய்யூப்
2010 ம் வருடம் முப்தி உமர் ஷரீப் காஸிமி