சிறுவர்கள் மதரசா

குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நமது தமிழ் இஸ்லாமிய மக்களின் பிள்ளைகள் மார்க்க கல்வியை முறைப்படி அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த சிறுவர்கள் மத்ரஸா குவைத் வார விடுமுறை தினங்களான வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நமது மர்கஸில் வைத்து நடைபெருகிறது.

முறையாக குரான் ஓதும் பயிற்சி
ஹதீஸ் விளக்கங்கள்
தொழுகை சட்டங்கள்
ஒழுக்க நெறிகள்
துஆக்கள்
இஸ்லாமிய வரலாறுகள்
உட்பட பல தலைப்புகளில் முறைப்படுத்தப்பட்ட பாட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

மாணவ செல்வங்கள் வந்து செல்ல (கட்டண) வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.