இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி கிழமையில் மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை குவைத்திலுள்ள இஸ்லாமிய பெண்கள் பயன்பெறும் வகையில் இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் பல! ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதி உண்டு.

நிகழ்ச்சிநடைபெறும்போது இடையூறை தவிர்க்க குழந்தைகளுக்கும் தனி இடவசதி உண்டு.

பெரும்பாலும் பெண்கள் சம்பந்தமான தலைப்புகளிலும், பொதுவான தலைப்புகளிலும் ஒரு மணி நேரம் சொற்பொழிவும் அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் பெண்களின் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

மொத்தத்தில் குவைத்தில் வசிக்கும் தமிழ் இஸ்லாமிய மக்கள் அனைவருமே பங்குபெறும் பயனுள்ள நிகழ்ச்சியாகும்.

நிகழ்ச்சியின் இடையில் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கப்படும்.

இதுவரை (1/7/2011) சுமார் 67 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

இந்தநிகழ்ச்சி குவைத் மாநகரின் Heart of city என அழைக்கப்படும் ஸால்மியா பகுதியில் அல்அமல் இந்தியன் ஸ்கூலில் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.