நமது இஸ்லாமிய தஃவா சென்டர் மேற்கொன்டு வரும் முக்கிய பணிகளில் ஒன்று முறையான வழிகாட்டுதலுடன் உம்ரா பயணம் அழைத்துசெல்வதாகும்.
இந்த பயணங்களில் சுமார் ஐம்பது பேர்வரை கலந்துகொள்வர். பயணத்தின் வழிகாட்டியாக நமது மர்கஸின் தாயிகளில் ஒருவரும் உடன் செல்வார்.
அவருடைய சீரிய வழிகாட்டுதலில் பயணம் இஸ்லாமிய முறையில் மேற்கொள்ளப்படும்.
பேரூந்தில் வைத்தும் சொற்பொழிவு அத்துடன் வரும் மக்களின் மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள்
தரமான தங்கும் வசதி
இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விள்க்கங்கள்.
மக்காவில் தங்கும் பொழுதும் மார்க்க உபதேசங்கள்
மினா முஜ்தலிஃபா மற்றும் அரஃபா போன்ற இஸ்லாமிய அடையாளங்களை குறித்த தெளிவான விளக்கங்கள்
ஹீரா குகை உஹதுமலை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் குறித்த குறிப்புகள்
உம்ரா கிறியைகளை மக்கள் நிறை வேற்றும் போது நிகழும் தவறுகள் குறித்த விழிப்புணர்வுகள்!
இத்துடன் பயணத்தை முடித்து, திரும்பி வரும் பொழுது பேருந்தில் வைத்தே இஸ்லாமிய வினாடி வினா நடத்தி சரியான பதில் சொல்லும் சகோதரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
